Descriptions:
“என்னால உங்களுக்கு என்ன காரியம் ஆகணும் சார்?” எனக் குழப்பமாகக் கேட்டவளிடம் அவனோ
“என்னோட வொய்ஃபா நடிக்கணும் நீ” என்றான் தீவிரமான குரலில்.. இதுவரை மரியாதையாக பேசியவன் இப்போது அவளை ஒருமையில் அழைத்திருந்தான்..
அவன் கூறியதில் வெளிப்படையாகவே அதிர்ந்துபோனவளோ “என்னால நடிக்கவெல்லாம் முடியாது சார்..” என்றிருந்தாள் வெடுக்கென..
இளந்தீபனோ தன் உதடுகளை சுழித்தவாறு “ஓகே.. அப்போ உண்மையாவே என் வொய்ஃபா மாறிடு..” என்றான் அசால்ட்டாக தோள்களை குலுக்கியவாறு.
அவனது அசால்ட்டான உடல்மொழியில் எரிச்சலுற்றவளோ “நீங்க விளையாட நான் ஒண்ணும் விளையாட்டு மைதானம் கிடையாது சார்” என்றாள் அழுத்தமாக.
“வெல்.. நல்லாவே பேசற நீ.. உனக்கு நான் கொடுக்கற பணத்தை நீ திருப்பி எனக்கு கொடுக்க வேண்டாம்.. அதுக்கு பதிலா என்னோட மனைவியா சிக்ஸ் மன்த்ஸ் ஏக்ட் பண்ணா போதும்”
முடியாது எனக் கூறிய பின்பும் அவன் மீண்டும் கேட்டதில் கோவமுற்ற மோனிகாவோ “அறிமுகம் இல்லாத பொண்ணுகிட்ட முதல் தடவை பார்க்கும்போது இப்படி கேக்கறது நாகரீகம் இல்லை சார்.. உங்களோட இந்த கோரிக்கையால என்னோட எதிர்காலம் மட்டுமில்லாம உங்களோட எதிர்காலமும் பாதிக்கப்படும்.. மனைவிங்கற பதவி, பந்தம் புனிதமானது.. அந்த புனிதமான பதவிக்கு போலியா நடிக்க சொல்றது என்னோட பார்வைல அதர்மமான செயல்” என்றாள்.
கீழுதட்டைக் கடித்து சிரித்த இளந்தீபனோ “இப்போ எதுக்கு எனக்கு பாடம் எடுத்துட்டு இருக்க?” எனக் கேட்டான்..
இளந்தீபன்-மோனிகா
தீக்ஷிதா-சந்திரமோகனின்
காதல் கதை
#tamilaudionovels
#simmavaginiriyanovels
#rjchitra
#tamilaudiobooks
#romanticnovels